ரூ 26134 கோடி நிறுவனம்... கோடீஸ்வரரின் மகள்: மருத்துவர் தொழிலைக் கைவிட்டு எடுத்த முடிவு
இந்திய கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் பலர் தங்கள் குடும்பத் தொழில்களில் ஈடு[படுவதற்குப் பதிலாக சொந்த விருப்பங்களைப் பின்பற்றி வருகின்றனர்.
மருத்துவர் தொழிலை
தங்களுக்குச் சரியான துறையல்ல என்பதை உணர்ந்த பின்னர் அவர்கள் வேறு துறையைத் தெரிவு செய்கின்றனர். அப்படியான ஒருவர் Zeba Moopen. ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேரின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆசாத் மூப்பனின் இளைய மகள்.
தமக்கு மிகவும் பிடித்தமான டைவர் பணியை தெரிவு செய்யும் பொருட்டு தனது மருத்துவர் தொழிலை விட்டுவிட்டார். ஜெபா தனது தந்தையின் நிறுவனத்திலும் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இவரது தந்தை கோடீஸ்வரர் மற்றும் ரூ.26134 கோடி சந்தை மதிப்பு கொண்ட ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஐக்கிய அமீரகத்தில் பிறந்து வளர்ந்த ஜெபா அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முன் மருத்துவப் படிப்புகளை முடித்தார்.
நிர்வாகப் பொறுப்பில்
அதன் பின்னர் இந்தியா திரும்பிய அவர், மணிப்பால் உயர் கல்வி அகாடமி.யில் இருந்து மருத்துவர் பட்டம் பெற்றார். ஆனால், மருத்துவராக பணியாற்றுவது தமக்கு சரியான முடிவாக இருக்காது என்பதை உணர்ந்த அவர், ஓராண்டு காலம் பயிற்சிக்கு பின்னர், தந்தையின் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் களமிறங்கினார்.
ஆனால் அங்கிருந்தும் விலக முடிவு செய்த ஜெபா, தொழில்முறை டைவராக வேண்டும் என்ற தமது கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். தற்போது AIDA4 சான்றிதழ் பெற்ற தொழில்முறை டைவராக செயல்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |