பழங்குடியின தினக்கூலி தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி
பழங்குடியின தினக்கூலி தொழிலாளியின் மகள், நிதி நெருக்கடியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
மருத்துவராக விருப்பம்
ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நுவாபாடா கிராமத்தைச் சேர்ந்த தினசரி கூலி வேலை செய்யும் நரேந்திர நாயக் மற்றும் பிரேமசில்லா நாயக்கின் மகள் தான் பிது நாயக். இவர்கள் பத்ரா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் குடும்பம் ஜெய்பட்னா தொகுதியில் உள்ள பட்கர்லகோட் கிராமப் பள்ளியின் கீழ் உள்ள நுவாபாடா கிராமத்தில் வசிக்கிறது.
21 வயதான பிது நாயக் தனது பெற்றோருடன் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார் பிது நாயக். மேலும் மருத்துவராக வேண்டும் என்று அவருக்கு விருப்பம்.
லஞ்சிகரில் உள்ள எஸ்டி/எஸ்சி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து, 2024 இல் லஞ்சிகர் தொகுதியில் முதலிடத்தைப் பிடித்தார்.
பிதுவின் உறவினரான லாவண்யா புஜார் என்பவர் பிது நாயக்கின் திறமையை உணர்ந்து நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு நிதி உதவி செய்தார்.
இதையடுத்து பயிற்சிக்காக புவனேஸ்வருக்குச் சென்ற பிது நாயக் ஜூன் மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வெற்றி பெற்றார்.
தற்போது மருத்துவராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்ற பிரம்மபூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் பிது நாயக்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |