சுகாதாரத் துறை நிறுவன பெரும் கோடீஸ்வரர்... ரூ 85,000 கோடி நிறுவனத்தில் பணியாற்றும் அவர் மகள்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய கோடீஸ்வரர்கள் தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களின் பொறுப்பை தங்கள் பிள்ளைகளுடன் தற்போது பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
திலீப் ஷங்வியின் மகள்
அவர்களை எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டுவர இது ஒரு தயாரிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அப்படியான ஒருவர் தான், தனது தந்தையின் நிறுவனத்தில் பணியாற்றும் விதி ஷங்வி.
சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நுகர்வோர் ஹெல்த்கேர் மற்றும் நியூட்ரிஷன் மற்றும் இந்திய விநியோகத் தலைவருமாக செயல்பட்டு வருகிறார் விதி.
சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவன உரிமையாளரான திலீப் ஷங்வியின் மகள் இந்த விதி. சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 85,462 கோடியாகும். டிசம்பர் 15ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில் சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
உளவியல் ஆரோக்கியத்தில்
சுகாதாரத் துறை நிறுவன உரிமையாளர்களில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் இந்த திலீப் ஷங்வி. இவரது மகள் விதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சன் பார்மாவில் பணியாற்றி வருகிறார்.
விதி ஷங்வி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
நுகர்வோர் பிரிவின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் சன் பார்மா இந்தியா பிசினஸின் சந்தைப்படுத்தல் செயல்பாட்டில் பணியாற்றியுள்ளார். மான் டாக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனரான விதி உளவியல் ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |