மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்ட தாய்! ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய பாலா
மகளின் சிகிச்சைக்காக உதவி கேட்ட தாயின் வீட்டிற்கு சென்று 'கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி புகழ் நடிகர் பாலா ரூ.1 லட்சம் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி கேட்ட தாய்
சமூக சேவையில் அக்கறை கொண்டவர் காமெடி நடிகர் பாலா. இவர், தன்னுடைய செலவில் குழந்தைகளை படிக்க வைத்தும், ஆதாரவற்ற முதியவர்களை பாதுகாத்தும், மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியும் பல உதவிகள் செய்து வருகிறார்.
இவர், சமீபத்தில் ஈரோடு பகுதியில் உள்ள மலைக்கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில், தனது மகளின் சிகிச்சைக்காக உதவி கேட்டு தாய் ஒருவர் பாலாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அவர், தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுவதால், இது குறித்த வீடியோவை பகிருமாறும் உதவி கேட்டுள்ளார்.
உதவிய பாலா
இதனை கேட்ட பாலா, அவருடைய மகளுக்கு உதவி செய்வதற்காக வீட்டிற்கே சென்று மகளுக்கு சிகிச்சை பெற ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்து, ஆர்த்தி தங்கச்சி சீக்கிரம் குணமடைய காத்திருக்கிறேன். நீங்களும் உதவி செய்ய வேண்டும் என நினைத்தால் அவரது அப்பாவைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண்ணை பகிர்ந்துள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |