ஆண் என கேலி செய்யப்படும் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி: மகள் வேதனை
ஆணாகப் பிறந்தவர் என தொடர்ந்து வம்புக்கிழுக்கப்படுவதால் தன் தாயின் உடல் நலம் மோசமடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார் பிரான்ஸ் முதல் பெண்மணியின் மகள்.

கேலி செய்யப்படும் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுடைய மனைவி பிரிஜிட் மேக்ரான். அவரது வயது 72.
அவரை விட மேக்ரானுக்கு 24 வயது குறைவு. ஆகவே, அதை சுட்டிக்காட்டி மேக்ரான் தம்பதியரை பலரும் கேலி செய்வதுண்டு. பிரிஜிட், சிறுபையனை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைப்பவர்கள் உண்டு.

அத்துடன், பிரிஜிட் ஆணாகப் பிறந்தவர் என அவரை வம்புக்கிழுப்பதையே முழு நேர வேலையாக செய்துவருபவர்களும் உண்டு. அமெரிக்கப் பெண்ணான கேண்டேஸ் ஓவன்ஸ் என்பவர் அப்படிப்பட்டவர்தான்.
இந்நிலையில், தொலைதொடர்பு தகவல் கருவிகள் மற்றும் இணையம் வாயிலாக பிரிஜிட்டை வம்புக்கிழுத்ததாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, பாரீஸ் நீதிமன்றம் ஒன்றில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர்கள், 41 வயது முதல் 65 வயது வரை உடைய, இரண்டு பெண்களும் எட்டு ஆண்களும் ஆவர்.
வழக்கை எதிர்கொள்பவர்கள் சிலர் குறித்த விவரம்
பிரிஜிட்டை வம்புக்கிழுத்ததாக வழக்கை எதிர்கொண்டுள்ளவர்களில் ஒருவர், ஊடகத்துறையைச் சார்ந்த Aurelien Poirson-Atlan (41) என்பவர்.

மற்றவர்கள், Jerome C. (55), Bertrand S. (56) Delphine J. (51), இந்த Delphine ஆவிகளுடன் பேசுபவர் என தன்னை அழைத்துக்கொள்பவர்.

இந்நிலையில், வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பிரிஜிட்டின் மகளான Tiphaine Auziére (41), தன் தாயின் பாலினம் குறித்து வெளியாகிவரும் ஆதாரப்பூர்வமற்ற செய்திகளால் அவரது உடல் நிலை மோசமாகிவருவதாக தெரிவித்தார்.

தனது இமேஜ் குறித்து தவறான செய்திகள் வெளியாகக்கூடும் என்பதால், எப்போதும் தனது உடை முதலான விடயங்கள் குறித்து தொடர்ந்து அவர் கவனம் செலுத்தும் நிலை அவருக்கு உருவாகியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் Tiphaine.
Tiphaine, பிரிஜிட்டின் முதல் திருமணம் மூலம் அவருக்கு பிறந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |