மகள் இனிப்பு வாங்கிவருமாறு அடம்பிடித்ததால் கடைக்குச் சென்ற தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்
இங்கிலாந்தில், தன் மகள் இனிப்பு வாங்கிவருமாறு அடம்பிடித்ததால் கடைக்குச் சென்றுள்ளார் ஒரு தந்தை.
தற்செயலாக ஒரு லொட்டரிச்சீட்டையும் வாங்கினார் அவர். இன்று, அவர் ஒரு கோடீஸ்வரர்!
மகளால் கோடீஸ்வரரான தந்தை
இங்கிலாந்திலுள்ள Cumbria என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Valdet Bujupi (44). Bujupiயின் மகள் இனிப்பு வாங்கிவருமாறு மூன்று முறை வற்புறுத்தியதால் கடைக்குச் சென்ற அவர் ஒரு லொட்டரிச்சீட்டையும் வாங்கியுள்ளார்.
அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 524,043 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. இலங்கை மதிப்பில் அது 21,35,91,751.73 ரூபாய் ஆகும்.
மகள் இனிப்பு வாங்க அடம்பிடித்ததால்தான் தான் கோடீஸ்ரனாகியிருப்பதாக பெருமையுடன் கூறுகிறார் Bujupi.
Bujupiயின் தாய் Kosovo நாட்டில் வாழ்கிறார். தன் தாய்க்கு பணம் அனுப்பி அவரது வாழ்க்கையை கொஞ்சம் கூட வசதியானதாக ஆக்கவேண்டும் என விரும்புகிறார் Bujupi.
அத்துடன், குடும்பமாக அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் ஆசையும் இருக்கிறதாம் அவருக்கு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |