என் தந்தைக்கும் கிடைத்திருந்தால்.. வீரப்பனை பற்றி உருக்கமாக பேசிய மகள் வித்யா ராணி
நல்ல சூழ்நிலையில் நான் வளர்ந்தது போல எனது தந்தையும் வளர்ந்திருந்தால் தவறான வழிக்கு போயிருக்க மாட்டார் என்று வீரப்பன் மகள் வித்யா ராணி உருக்கமாக பேசியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள் வித்யா ராணி, மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் குறைகளை கூறி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்தவகையில் வேட்பாளர் வித்யா ராணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
வீரப்பன் மகள் பேசியது
அவர் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது, "நான் என்னுடைய பெற்றோர் இடத்தில் வளரவில்லை. நான் நல்ல சூழலில் வளர்ந்ததால் நன்றாக படித்து நிற்கிறேன்.
இந்த மாதிரியான சூழ்நிலை எனது தந்தைக்கும் கிடைத்திருந்தால் அவரும் தவறான பாதைக்கு சென்றிருக்க மாட்டார். எனது தந்தை கிராமத்தில் எத்தனை பேர் சந்தனமரத்தை வெட்டி, தந்தங்களை கடத்தினார்கள். என் தந்தை மட்டும் தான் செய்தாரா, மற்றவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இன்று நீங்கள் மலையை உடைத்து விற்பதும் திருட்டு தான். நாளை உங்களது பிள்ளைகளும் நடுத்தெருவில் தான் நிற்பார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |