மகளுக்கு ராக்கி கட்ட தம்பி வேண்டும்! பெற்றோர் செய்த காரியம்
டெல்லியில் தங்களுடைய மகளுக்கு ராக்கி கட்ட சகோதரன் வேண்டும் என்பதால், பெற்றோர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளின் ஆசை
டெல்லி, தாகூர் கார்டன் நகரின் ரகுபீர் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினார் சஞ்சய் குப்தா (41) மற்றும் அனிதா குப்தா (36). சஞ்சய் டாட்டூ கலைஞராகவும், அனிதா மெகந்தி கலைஞராகவும் உள்ளனர்.
இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மகன் இறந்துள்ளார். பின்னர் ஒருநாள் இவர்களின் 15 வயது மகள், ரக்சா பண்டிகையின் போது ராக்கி கட்ட தனக்கு சகோதரன் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடத்தலில் ஈடுபட்ட பெற்றோர்
இதனால், இவரது பெற்றோர் குழந்தையை கடத்த வேண்டும் என்று முடிவு செய்து, சட்டா ரெயில் சவுக் பகுதியின் சாலையோரத்தில் வசித்து வரும் தம்பதியினரின், ஒரு மாத ஆண் குழந்தையை திருடியுள்ளனர்.
பின்னர், கடத்திய குழந்தையின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்ததையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, சிசிடிவி கேமராவில் பார்த்த போது, தம்பதியினர் பைக்கில் வந்து குழந்தையை கடத்தி கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.
மேலும், சஞ்சய் கடந்த காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது 3 குற்ற வழக்குகள் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |