தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை - வீடியோ காலில் பார்த்த மகள்கள்

Mumbai
By Karthikraja Aug 06, 2026 09:27 AM GMT
Report

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர்.

தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி வியாபாரி சிவசரண் ராம்ரதன் குப்தாவிற்கு 3 மகள்கள் உள்ளனர்.

சிவசரண் தனது 3 மகள்களையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து தந்தையாக தனது கடமையை நிறைவேற்றியுள்ளார். 2 மகள்கள் ஆசிரியையாக உள்ளனர். 

தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை - வீடியோ காலில் பார்த்த மகள்கள் | Daughters Watch Father Funeral On Video Call

ஒரு மகள் நேபாளத்திலும், மற்றொரு மகள் உத்தரபிரதேசத்திலும், இன்னொரு மகள் மும்பையில் வசித்து வந்தாலும், தனது பெற்றோரை கவனித்து கொள்ள முடியாது என ஹரியானாவில் உள்ள சோனிபட் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

அவரது மனைவி மீனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில், சிவசரணும் கடந்த சில மாதங்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு தற்போது காலமாகியுள்ளார்.

சிவசரணின் இறப்பு குறித்து அவரது மகள்களுக்கு முதியோர் இல்ல நிர்வாகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தையின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல் - கருவிலே அறுவை சிகிச்சை

குழந்தையின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல் - கருவிலே அறுவை சிகிச்சை

ஆனால், நேரில் வந்து கலந்து கொள்ள நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலமாக இறுதிசடங்கை பார்த்துள்ளனர்.

இது குறித்து பேசிய முதியோர் இல்ல நிர்வாகி, அவர் முதியோர் இல்லத்தில் இருந்த தொலைபேசி மூலம் தனது மகள்களுடன் அடிக்கடி பேசி வந்தார்.

ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, அவர்களது தொலைபேசி அழைப்புகள் குறைந்துவிட்டன.

அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே அவரின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து அவரது மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவரைப் பார்க்க வரவில்லை.

அவர் இறந்த பின்னர் நிர்வாகம் மீண்டும் மகள்களைத் தொடர்புகொண்டு, சோனிபட்டுக்கு வந்தால் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறியது. ஆனால், பயணம் செய்யத் தங்களுக்கு நேரமில்லை என்றும்,  வீடியோ காலில் பார்ப்பதாகவும் மகள்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மகள் இறுதிச்சடங்கை முறையாக நடத்த கோரி, ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். உடலை தகனம் செய்த பிறகு, இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டனர்.

அவர்களில் ஒருவர் தொலைபேசி அழைப்பில், "இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும்" என்று கூறுவது கேட்டது" என தெரிவித்துள்ளார்.

முதலில் அவரின் அஸ்தியை கொடுக்குமாறு கேட்ட அவரது மகள்கள், பின்னர், சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என்று கூறி அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US