லண்டனில் கோடீஸ்வர பெண்ணை மணந்த கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காமின் 71 வயதான தந்தை!
பிரித்தானியாவை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காமின் தந்தை கோடீஸ்வர பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
லண்டனில் தான் Ted (71) - Hilary Meredith தம்பதி திருமணம் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த திருமணத்தில் தனது தந்தை Tedக்கு மாப்பிள்ளை தோழனாக டேவிட் பெக்காம் இருந்தார். இந்த திருமணத்தின் போது டேவிட் பெக்காம் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
Tedம் Hilaryம் கடந்த ஆண்டு ஒரு தொண்டு பணிகள் தொடர்பாக முதன் முதலில் சந்தித்து கொண்டனர். பின்னர் தங்களது நிச்சயதார்த்தம் குறித்து கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவித்தனர்.
இந்த நிலையில் தான் அவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
Tedக்கு டேவிட் பெக்காம் தாய் சாண்ட்ராவுடன் கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.