Netflix ஆவணப்பட வெற்றியால் மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளிய பிரித்தானியர்!
இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் ஆவணப்பட வெற்றிக்கு பின், அவரது வருமானம் 29 மில்லியன் பவுண்ட்கள் உயர்ந்துள்ளது.
450 மில்லியன் சொத்து மதிப்பு
விளையாட்டு, பேஷன் மற்றும் இதர சொத்துக்கள் மூலம் டேவிட் பெக்காம் மற்றும் விக்டோரியா தம்பதியின் சொத்து மதிப்பு 450 மில்லியன் பவுண்ட்களாக உள்ளது.
பெக்காமின் ஆவணப்படம் Netflix தளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது பிராண்ட்கள் 2023யில் இரட்டிப்பு லாபத்தை எட்டியது.
இதன்மூலம் பெக்காம், விக்டோரியா தம்பதியின் சொத்துக்கள் தற்போது கிட்டத்தட்ட 29 மில்லியன் பவுண்ட்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
townhouse
12 ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் பெக்காம் ஓய்வு பெற்ற போதிலும், அவர் தனது பிராண்ட்கள் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
குறிப்பாக, அக்டோபரில் 60 மில்லியன் பவுண்ட்கள் மியாமி மெகா மென்க்ஷனை வாங்கியதன் மூலம் பெக்காம் தனது சொத்து சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.
இந்த தம்பதிக்கு, லண்டனின் ஹாலண்ட் பூங்காவில் 31 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான townhouse மற்றும் Cotswoldsயில் 12 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான Country pile ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |