கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் ஒவ்வொரு வாரமும் ஈட்டும் வருவாய் எவ்வளவு? கசிந்த தகவல்
பிரித்தானிய கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் ஆடம்பர பிராண்டுகள் உடன் பணியாற்றத் தொடங்கிய பின்னர் 9 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மில்லியன் பவுண்டுகள்
2021ல் புதிதாக நிறுவனம் ஒன்றில் விளம்பர ஒப்பந்தம் மேற்கொண்ட டேவிட் பெக்காம் அதன் மூலமாக மில்லியன் பவுண்டுகள் தொகைகளை குவித்துள்ளார்.
@WireImage
பெக்காம் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் பாடகியுமான விக்டோரியா பெக்காம் ஆகியோர் முன்னெடுத்துவரும் நிறுவனத்தின் வரவு செலவுகள் தற்போது கசிந்துள்ளது.
வரிகள் போக 2020ல் 11.6 மில்லியன் பவுண்டுகள் என ஆதாயம் பார்த்துள்ள இவர்களின் நிறுவனம் தற்போது 19.1 மில்லியன் என அதிகரித்துள்ளது. மொத்த வருவாய் 11.4 மில்லியன் பவுண்டுகளில் இருந்து 34.3 பவுண்டுகள் எனவும் உயர்ந்துள்ளது.
வாரமும் 653,486 பவுண்டுகள்
2021ல் டேவிட் பெக்காம் நிறுவனமானது ஒவ்வொரு வாரமும் 653,486 பவுண்டுகளை வருவாயாக ஈட்டியுள்ளது. மேலும், 2021ல் பெக்காம் நிறுவனம் புதிதாக Electronic Arts, Adidas, Tudor, Diageo's Haig Club மற்றும் Maserati ஆகிய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஆனால், கத்தார் உலகக் கோப்பை தொடருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டதற்கு 10 மில்லியன் பவுண்டுகள் பெற்றதை இந்த பட்டியலில் உட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.