இங்கிலாந்தின் ஆணிவேரை தட்டி தூக்கியா இந்தியா! ஆல் அவுட் ஆவது உறுதி: மிரட்டி வரும் பவுலர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான வீரரை உமேஷ் யாதவ் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட்டும் நேற்றே 21 ஓட்டங்களில் அவுட் ஆகியதால், அந்தணி டேவிட் மலானையே அதிகம் நம்பியிருந்தது. ஆனால், இன்று வந்த சில ஓவர்களிலே அவரை உமேஷ் யாதவ் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
Umesh Yadav on song ! He gets his third wicket & a brilliant diving catch from Rohit sends Malan back into the pavilion .. India on top .. England 5 down for 62 .. #ENGvIND pic.twitter.com/NXcLTPMoax
— ?︎?︎?︎?︎????? ?????™ ??❤️ (@CricCrazyMrigu) September 3, 2021
இதனால் இங்கிலாந்து ஆணிவேர் காலியாகிவிட்டது, இன்றி இங்கிலாந்து 150-க்குள் ஆல் அவுட் ஆவது உறுதி என்று இந்திய ரசிகர்கள் கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.
சற்று முன் வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. மேலும், மலான் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உமேஷ் யாதவ் தன்னுடைய 3-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் இங்கிலாந்து அணி திணறி வருவது குறிப்பிடத்தக்கது.