அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வாணவேடிக்கை காட்டிய வீரர்! 82 ஓட்டங்கள் விளாசல்
டேவிட் மாலன் 50 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 14 அரை சதங்கள் அடித்துள்ளார்
மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸிற்கு டி20 கிரிக்கெட்டில் இது சிறந்த பந்துவீச்சு ஆகும்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து 178 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கேன்பெர்ராவில் நடந்து வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ் 4 ஓட்டங்களும், பட்லர் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஸ்டோக்ஸ், ப்ரூக் இருவரும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் டேவிட் மாலன், மொயீன் அலி இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
FIFTY in his FIFTIETH IT20 ?
— England Cricket (@englandcricket) October 12, 2022
Scorecard: https://t.co/jOoguPDhFx
?? #AUSvENG ??????? @dmalan29 pic.twitter.com/eK5anPFzbD
சிக்ஸர்களை பறக்கவிட்ட மாலன் 49 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். மொயீன் அலி 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளையும், சம்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
We set Australia 179 to win ?
— England Cricket (@englandcricket) October 12, 2022
Malan 82 Moeen 44
Scorecard: https://t.co/jOoguPDhFx
?? #AUSvENG ??????? pic.twitter.com/ivYmo5I1DG