டேவிட் மில்லர் சரவெடி சதம்! டெம்பா பவுமா நிதானமாக 103 ஓட்டங்கள்..திணறும் அவுஸ்திரேலியா
David miller and temba bavuma century vs australia: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா, மில்லர் சதம் விளாசினர்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா, டேவிட் மில்லர் சதம் விளாசினர்.
பவுமா சதம்
ஜோஹன்னஸ்பர்க்கில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
தொடக்க வீரர்கள் சொதப்ப மேத்யூ ப்ரீட்ஸ்கி 34 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
மில்லர் அதிரடி
பின்னர் டெம்பா பவுமா (Temba Bavuma) மற்றும் டேவிட் மில்லர் (David Miller) கூட்டணி அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தது.

டெம்பா பவுமா தனது 6வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் ஸ்கோர் 249 ஆக உயர்ந்தபோது பவுமா ஆட்டமிழந்தார். அவர் 103 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) குவித்தார்.
அதனைத் தொடர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட டேவிட் மில்லர் 73 பந்துகளில் 7வது சதத்தை நிறைவு செய்தார்.
