கடைசி 2 பந்தில் செய்த தவறு - கதறி அழுத டேவிட் மில்லர்
1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், டேவிட் மில்லர் அழுத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி
2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.
211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதில், டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், டேவிட் மில்லர் 19.5 வது பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வாய்ப்பு இருந்தும் ஓடாமல் இருந்தார்.
கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்து விடலாம் என நினைத்த அவரால், கடைசி பந்தை அடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு ஓட்டம் ஓட முயற்சித்த போது, மறுமுனையில் இருந்த குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனார்.

இதன் மூலம், பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது.
அழுத டேவிட் மில்லர்
அப்போது மைதானத்தில் இருந்து சோகமாக வெளியேறிய டேவிட் மில்லருக்கு அணித்தலைவர் அக்சர் படேல் ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் ஓடாமல் தவறு செய்து விட்டதாக வீரர்கள் ஓய்வறையில் தனியாக அமர்ந்து டேவிட் மில்லர் அழுதுள்ளார்.

டேவிட் மில்லர் அழுத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |