சிக்சர் அடித்த பிறகு வீழ்ந்த அஸ்வின்! கீழே விழுந்து புரண்டு கேட்ச் பிடித்த டேவிட் மில்லர் வீடியோ
ஐபிஎல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வேகமாக அடித்த பந்தை லாவகமாக மில்லர் கேட்ச் செய்த விதம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 24வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 8 ரன்களில் அவுட்டானார். இதில் ஒரு மிரட்டலான சிக்சரும் அடங்கும். 8 ரன்களில் ஆடி கொண்டிருந்த அவர் லோக்கி பந்தை ஆப் திசை நோக்கி வேகமாக அடித்தார்.
What a catch .. #IPL20222 #GTvsRR pic.twitter.com/J10tOMyRV0
— Cricketupdates (@Cricupdates2022) April 14, 2022
இதையடுத்து அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த டேவிட் மில்லர் கீழே விழுந்து புரண்டு லாவகமாக பந்தை பிடித்து அஸ்வினை அவுட்டாக்கினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.