அமைதியாக இருங்கள்.. ஆட்டம் தொடங்கியது! டேவிட் மில்லர் வெளியிட்ட புகைப்படம்
குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் டேவிட் மில்லர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் டேவிட் மில்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
தொடக்கத்தில் பெரிதளவில் ஓட்டங்கள் எடுக்காத மில்லர், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 51 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
அவரை மிரட்டலான ஆட்டத்தை பார்த்து வியந்த ரசிகர்கள் killer miller is back என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனுடன் அமைதியாக இருங்கள் ஆட்டம் தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் மிரட்டலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
KEEP CALM AND GAME ON pic.twitter.com/c2WtcYFJUp
— David Miller (@DavidMillerSA12) April 18, 2022