ஃபுல்டாஸ் பந்தால் வீரரை தாக்கிய பந்துவீச்சாளர்! எச்சரிக்கையை மீறி மற்றொரு வீரர் மீதும் தாக்குதல்..வீடியோ
பிக் பாஷ் லீக் தொடரில் துடுப்பாட்ட வீரர்களை தாக்கும் வகையில் பந்துவீசிய வீரரை நடுவர்கள் வெளியேற்றினர்.
டேவிட் மூடி
பெர்த் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மெல்போர்ன் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பெர்த் அணியை துடுப்பாட்டம் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய பெர்த் அணியின் தொடக்க வீரர்களான ஸ்டீபன் எஸ்கினஸி, கேமரூன் பான்கிராப்ட் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
முன்னதாக இரண்டாவது ஓவரை டேவிட் மூடி முதல் பந்தை ஃபுல்டாஸ் ஆக வீசினார். அந்த பந்து துடுப்பாட்ட வீரர் பான்கிராப்ட்டை தாக்கும் வகையில் சென்றது. எனினும் அவரது கைகளில் பட்டது. இதனால் நடுவர் நோ பால் என அறிவித்து எச்சரிக்கை செய்தார்.
Crazy scenes at Optus Stadium.
— KFC Big Bash League (@BBL) January 22, 2023
After just two legal deliveries, David Moody is ruled out of the attack @KFCAustralia #BucketBall #BBL12 pic.twitter.com/eGfeFw7yUp
வெளியேற்றிய நடுவர்கள்
அதன் பின்னர் ஒரு ரன் ஓடியதால் அடுத்த பந்தை எஸ்கினஸி எதிர்கொண்டார். ஆனால் அவரையும் தாக்கும் வகையில் மூடி மீண்டும் ஃபுல்டாஸ் பந்தை வீசினார்.
இந்தமுறை எஸ்கினஸி அதனை பவுண்டரியாக மாற்றினார். மறுபடியும் நோ பால் என அறிவித்த நடுவர்கள், உடனடியாக அவரது ஓவரை நிறுத்தி அவரை வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து ஜேக் பிரெஸ்ட்விட்ஜ் மீதமுள்ள 5 பந்துகளை வீசினார்.
1️⃣5️⃣0️⃣0️⃣ runs in the Big Bash for Bangers! ? What a milestone from our opener ? #MADETOUGH #BBL12 pic.twitter.com/1Hu9qO8vor
— Perth Scorchers (@ScorchersBBL) January 22, 2023