150வது போட்டியில் சரவெடியாய் வெடித்த வார்னர்! 32 பந்தில் அரைசதம் விளாசல்
இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதிரடியாக அரைசதம் விளாசினார்.
கடைசி ஒருநாள் போட்டி
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை துவங்கி விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
AFP
வார்னர் ருத்ர தாண்டவம்
தனது 150வது போட்டியில் களமிறங்கிய வார்னர் சிக்ஸர்களை பறக்கவிட்டு அதகளம் செய்தார். இதன்மூலம் அவர் 32 பந்துகளிலேயே அரைசதம் எட்டினார்.
A 32-ball fifty for David Warner! #INDvAUS
— cricket.com.au (@cricketcomau) September 27, 2023
அவரது அதிரடிக்கு முட்டுக்கட்டை போட்ட பிரசித் கிருஷ்ணா, வார்னரை 56 (34) ஓட்டங்களில் வெளியேற்றினார். இது அவருக்கு 31வது ஒருநாள் அரைசதம் ஆகும்.
வார்னரின் ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். தற்போது வரை அவுஸ்திரேலிய அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |