பிரிஸ்பேன் ஹீட்டை அடித்து நொறுக்கிய கேப்டன் டேவிட் வார்னர்: சரவெடி ஆட்டம் (வீடியோ)
பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு போட்டியில், டேவிட் வார்னர் 56 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசினார்.
டேவிட் வார்னர்
சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் 29வது போட்டி தி காபா மைதானத்தில் நடந்து வருகிறது.
DROPPED 😮
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
Marnus Labuschagne was this close to dismissing David Warner. #BBL15 pic.twitter.com/gHsaCYvoOU
நாணய சுழற்சியில் வென்ற சிட்னி அணி முதலில் துடுப்பாடியது. கில்க்ஸ் (10), பான்கிராஃப்ட் (4) ஆகியோர் சொதப்ப அணித்தலைவர் டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சாம் பில்லிங்ஸ் 34 (26) ஓட்டங்களும், நிக் மேடின்சன் 21 (14) ஓட்டங்களும் எடுத்தனர்.
டேவிட் வார்னர் (David Warner) 56 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் விளாச, சிட்னி தண்டர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது.
@BBL/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |