65 பந்தில் 130 ரன் விளாசிய வார்னர்! 14 ஆண்டுகளுக்கு பின் ருத்ர தாண்டவம்..அதிர்ந்த மைதானம்
பிக் பாஷ் லீக்கின் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சிட்னி தண்டர் அணித்தலைவர் டேவிட் வார்னர் 130 ஓட்டங்கள் விளாசினார்.
அடித்து நொறுக்கிய டேவிட் வார்னர்
சிட்னியில் நடந்து வரும் பிக் பாஷ் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
130 not out. 65 balls.
— KFC Big Bash League (@BBL) January 3, 2026
Here's the best of David Warner's incredible #BBL15 hundred! pic.twitter.com/GperFoc4ye
நாணய சுழற்சியில் வென்ற ஹோபர்ட் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி டேவிட் வார்னர் (David Warner), மேத்யூ கில்க்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால், ப்ரெஸ்ட்வெட்ஜ் முதல் பந்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். கில்க்ஸ் விக்கெட் கீப்பர் வேட்-யிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்த பந்திலேயே சாம் கோன்ஸ்டாஸ் போல்டாகி நடையைக் கட்டினார்.
எனினும் அணித்தலைவர் டேவிட் வார்னர் வாணவேடிக்கை காட்ட, அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கிவிட்ட வார்னர் அரைசதம் கடந்தார்.
David Warner brought out the '6-7' celebration after his trademark jump 😂 #BBL15 pic.twitter.com/e3TtlebNBf
— KFC Big Bash League (@BBL) January 3, 2026
சதம் விளாசல்
மறுமுனையில் பில்லிங்ஸ் 20 ஓட்டங்களும், மேடின்சன் 30 ஓட்டங்களும் எடுத்தனர். என்றாலும் வார்னர் தனது வேகத்தை நிறுத்தவில்லை.
கடந்த 4 ஆட்டங்களாக அரைசதம் அடிக்கவே தடுமாறிய அவர், 57 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பிக்பாஷில் சதம் அடித்துள்ளார். கடைசி ஓவரிலிலும் பட்டையைக் கிளப்பிய வார்னர் 65 பந்துகளில் 130 ஓட்டங்கள் குவித்தார். இதில் 9 சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும்.

சிட்னி தண்டர் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. டேனியல் சாம்ஸ் 14 (6) ஓட்டங்கள் எடுத்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |