புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து கட்டியணைத்த வார்னர் - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து கட்டியணைத்த வார்னரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெற்றி பெற்ற டெல்லி அணி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது பல நகரங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நேற்று ஐதராபாத் மைதானத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் நாணய சுழற்சி செய்யப்பட்டது.
இதில் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் முதலில் துப்பாட்டம் செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து விளையாடிய டெல்லி அணி இப்போட்டியின் முடிவில் 9 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை சேர்த்தது.
இதன் பிறகு, 145 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களத்தில் இறங்கியது. இப்போட்டியின் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அமோக வெற்றி அடைந்தது.
புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்த வார்னர்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் நிறைவில், ஐதராபாத் வீரர் புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து, கட்டியணைத்து அன்பை டெல்லி கேப்டன் வார்னர் பரிமாறினார். புவனேஷ்வரே ஒரு நிமிடம் அப்படியே திகைத்துப்போனார். இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கரகொஷங்களை எழுப்பினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உறைந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
David Warner meets his former teammate Bhuvneshwar Kumar. pic.twitter.com/NQ1IaF2va8
— Cricket is Love ❤ (@cricketfan__) April 24, 2023