டேவிட் வார்னர் விக்கெட்டை தட்டிதூக்கிய வனிந்து ஹசரங்கா! ஏற்று கொள்ளமுடியாமல் அழுத மகளின் வீடியோ
ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் அவுட்டானதை ஏற்று கொள்ள முடியாமல் அவர் மகள் அழுத வீடியோ வெளியாகியுள்ளது.
27வது லீக் போட்டியில் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. இப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் டெல்லி வீரர் டேவிட் வார்னர் 66 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வார்னர், வனிந்து ஹசரங்காவின் பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடிக்க முயற்சி செய்தார்.
— Addicric (@addicric) April 16, 2022
அப்போது, எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். இதனை கேலரியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த வர்னரின் மகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வார்னருக்கு அவுட் கொடுத்ததும், மகள் ஈவி கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.