100வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வார்னர்!
அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
வார்னரின் 100வது டெஸ்ட்
அவுஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்க்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 189 ஓட்டங்களுக்கு ஆல் அவுட். அதனைத் தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
A double century for David Warner!
— cricket.com.au (@cricketcomau) December 27, 2022
But his #OhWhatAFeeling jump comes at a cost! ?#AUSvSA | @Toyota_Aus pic.twitter.com/RqJLcQpWHa
@Twitter/ICC
தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வார்னர் அபாரமாக சதம் விளாசினார். மேலும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தார்.
@AP
வரலாற்று சாதனை
இதன்மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். சர்வதேச அளவில் இந்த சாதனையை படைத்த 10வது வீரர் வார்னர் ஆவார். மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்கள் என்ற மைக்கல்லை எட்டினார்.