ஒரு போன் செய்தால் போதும் களத்தில் இறங்கிவிடுவேன் - டேவிட் வார்னர்
தேர்வுக்குழு அழைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதாக அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் (David Warner) இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
வார்னர் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்களுடன் 8786 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு அழைத்தால் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
நான் தேவை என்றால்
இதுதொடர்பாக ஊடக அமைப்பான News Corpயிடம் அவர் கூறுகையில், "தொலைபேசியை எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். எப்போதும் நான் தீவிரமானவன்தான். நேர்மையாக கூறவேண்டும் என்றால், வீரர்கள் பிப்ரவரியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். கிட்டத்தட்ட நானும் அதேபோல் தயாராக இருந்தேன்.
இந்தத் தொடருக்கு (Shield) அவர்களுக்கு நான் தேவை என்றால், அடுத்த Shield ஆட்டத்தில் விளையாடி, அங்கு செல்வதில் மகிழ்ச்சியடைவேன். எனது விளையாட்டை முடிக்க சரியான காரணங்களுக்காக நான் ஓய்வு பெற்றேன்.
நான் முடிக்க விரும்பினேன். ஆனால் அவர்களுக்கு யாரேனும் அவரசரமாக தேவைப்பட்டால் நான் கையை உயர்த்துவேன். அதற்காக நான் வெட்கப்பட மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |