ஐபிஎல் போட்டியின் நம்பமுடியாத அற்புத ஷாட்! பேட்டை திருப்பி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வீடியோ
ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் அடித்த நம்பமுடியாத ஒரு ஷாட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் தான். அவர் 58 பந்துகளில் 92 ரன்களை விளாசியதே டெல்லி அணி ஹைதராபாத் அணியை வீழ்த்த காரணமாக இருந்தது.
This amazing shot by @davidwarner31!! What do you call it?
— Joy Chakravarty (@TheJoyofGolf) May 5, 2022
A reverse glide?
Let’s have your take, @KP24/@wvraman? pic.twitter.com/32pbYu9CN4
இந்த 92 ரன்களில் பல அற்புதமான ஷாட்களை வார்னர் அடித்தார். அதிலும் புவனேஷ்வர் குமார் வீசிய ஒரு பந்தில் இடதுகை வீரரான வார்னர் வலது கைக்கு மாறி ஒரு வித்தியாசமான ஷாட்டை அடித்து பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.
இந்தாண்டு ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட நம்பமுடியாத சூப்பரான ஷாட் இது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.