உலகின் மிக சிறந்த போட்டி என்றால் அது ஐபிஎல் தான்! டேவிட் வார்னர்
உலகின் மிகச்சிறந்த போட்டித் தொடர் என்றால் அது ஐபிஎல் தான் என முன்னாள் அணித்தலைவரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீயுடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இந்தியாவுக்குச் செல்லும்போது உலகின் சிறந்த போட்டியில் அதாவது ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்கிறேன்.
டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியாக இருந்தாலும், பயிற்சி மற்றும் நுண்ணறிவு எனக்கு நிறைய கிடைக்கிறது.
எதிர்காலத்தில் இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் உள்ளூர் மக்களின் வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் வெளியே செல்வதையும், அங்குள்ள மக்களைச் சந்திப்பதையும் விரும்புகிறேன், உள்ளூர் மக்களுடன் இணைந்திருப்பது எனக்குப் பிடிக்கும், இந்தியாவுக்கு கடன்பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.