அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த மூத்த வீரர்கள்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் டேவிட் மலான், ஷனான் கேப்ரியல் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
டேவிட் மலான்
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை எட்டிய வீரர் எனும் சாதனைக்கு சொந்தக்காரர் இங்கிலாந்தின் டேவிட் மலான் (Dawid Malan).
அதேபோல் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச சராசரி (55.77) கொண்ட இங்கிலாந்து வீரராக உள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் 36 வயதான டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் 30 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 1,450 ஓட்டங்களும், 62 டி20 போட்டிகளில் ஒரு சதம், 16 அரைசதங்களுடன் 1,892 ஓட்டங்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, 22 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்களுடன் 1,074 ஓட்டங்களும் குவித்துள்ளார்.
Dawid Malan announces his retirement from international cricket - congratulations on a fantastic international career @DJMalan29 !#YorkshireFamily pic.twitter.com/kDe7EcQRyS
— Yorkshire CCC (@YorkshireCCC) August 28, 2024
ஷனான் கேப்ரியல்
மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷனான் கேப்ரியல் (36), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்ரியலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
59 டெஸ்டில் விளையாடியுள்ள ஷனான் கேப்ரியல் (Shannon Gabriel) 166 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 8/62 ஆகும். அதேபோல் 25 ஒருநாள் போட்டிகளில் 33 விக்கெட்டுகளும், 2 டி20களில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |