திசர பெரேராவின் அணி படுதோல்வி: வெற்றியைத் தட்டிப் பறித்த இருவர்
BPL தொடரின் டாக்கா கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் போர்டுன் பரிஷால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டன்ஸித் ஹசன் 62
வங்காளதேச பிரீமியர் லீக் தொடர் போட்டியில், திசர பெரேராவின் டாக்கா கேபிட்டல்ஸ் மற்றும் தமிம் இஃக்பாலின் போர்டுன் பரிஷால் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டாக்கா கேபிட்டல்ஸ் (Dhaka Capitals) 19.3 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
டன்ஸித் ஹசன் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசினார். தன்விர் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், பஹீம் அஷ்ரப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
போர்டுன் பரிஷால் அணி வெற்றி
பின்னர் களமிறங்கிய போர்டுன் பரிஷால் (Fortune Barishal) அணியில், ஷாண்டோ 2 ஓட்டங்களில் வெளியேற, தமிம் இஃக்பால் அதிரடியாக அரைசதம் விளாசினார்.
48 பந்துகளை எதிர்கொண்ட அவர், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் குவித்து, திசர பெரேராவின் ஓவரில் அவுட் ஆனார்.
பின்னர் நிலைத்து நின்று ஆடிய தாவித் மலான் ஆட்டமிழக்காமல் 49 (41) ஓட்டங்கள் எடுக்க, போர்டுன் பரிஷால் அணி 16 ஓவரில் 145 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Too easy a target for someone like Dawid Malan 👏
— Cricketangon (@cricketangon) January 16, 2025
He falls short of runs to 'chase' to reach his Fifty, but he'll be happy with another victory for Fortune Barishal.#BPLT20 pic.twitter.com/SfLLZX6kJO
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |