T20 கிரிக்கெட்டில் ரெய்னாவின் சாதனையை முறியடித்த டேவிட் மலான்
T20 கிரிக்கெட்டில் ரெய்னாவின் சாதனையை இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முறியடித்துள்ளார்.
பிரித்தானியாவில் The Hundread கிரிக்கெட் தொடர், ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில், நார்த்தன் சூப்பர்சார்ஜஸ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் மோதியது.
இந்த போட்டியில், நார்த்தன் சூப்பர்சார்ஜஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டேவிட் மலான் சாதனை
இந்த போட்டியில், நார்த்தன் சூப்பர்சார்ஜஸ் வீரர் டேவிட் மலான் 32 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதன் மூலம், T20 போட்டிகளில், ஒரு நாட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவை முந்தியுள்ளார்.
டேவிட் மலான், இங்கிலாந்தில் இதுவரை 240 போட்டிகளில் விளையாடி, 3 சதம், 43 அரைசதம் உட்பட 6555 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா, இந்தியாவில் 237 போட்டிகளில் விளையாடி, 6553 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம், ஒரு நாட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் மலான் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
9704 ஓட்டங்களுடன் விராட் கோலி முதல் இடத்திலும், 8426 ஓட்டங்களுடன் ரோஹித் சர்மா 2வது இடத்திலும், 7626 ஓட்டங்களுடனஷிகர் தவான் 3வது இடத்திலும், 7398 ஓட்டங்களுடன் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |