தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு!
அக்டோபர் பிற்பகுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் கொண்டாடப்படும் தீபாவளி இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியைக் குறிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும்.
இந்தியா இதை மிகவும் ஆடம்பரத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடும் அதே வேளையில், மற்ற நாடுகளும் தற்போது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான தீபாவளி அக்டோபர் 31 ஆம் திகதி வருகிறது. இது வியாழக்கிழமை என்பதால், வெள்ளி ஒரு நாள் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்.
வெளியான முக்கிய அறிவிப்பு
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1 ஆம் திகதியை விடுமுறையாக அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கு அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் திகதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இதனால் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை விழா 30.10.2024 அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |