அப்படியே ஆஸ்திரேலியாவ பார்த்த மாதிரி இருந்துச்சு! இந்தியாவை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற்ற இந்தியாவை, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் பாராட்டியுள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. இதற்கு முன்னணி வீரர்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான Steve Harmison, இந்திய புகழ்ந்துள்ளார். இந்த போட்டி குறித்து அவர் கூறுகையில், தற்போது நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடர் கோஹ்லியின் கேப்ட்ன்சியை பரிசோதனயாகவே நடந்து வருகிறது என்று கூறுவேன்.
எந்த ஒரு பாதகமான சூழ்நிலையில் இந்திய மிகப் பெரிய அளவில் மீண்டும் வருகிறது. இது ஒரு தனித்துவமானது. பொதுவாக ஐந்தாவது நாளில் வீரர்கள் சோர்வடைந்துவிடுவார்கள்.
ஆனால் இந்திய அணி வீரர்கள் அப்படி இல்லவே இல்லை. ஒரு அழுத்தமான சூழ்நிலையில் எப்படி அதை எதிர் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஐபிஎல் போன்ற தொடர்கள் உதவுகிறது.
அதையே தான் இந்த டெஸ்ட் போட்டியிலும் செய்துள்ளனர்.
ஐந்தாம் நாளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்றால், ஒரு காலத்தில் அவுஸ்திரேலியாவாகத் தான் இருந்தது. அந்த திறன் இப்போது இந்தியாவிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.