மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கடைசி இடத்தைப் பிடித்த கனேடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு
ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட அந்த கனேடிய பெண் கடைசி இடத்தைத்தான் பிடித்தார். ஆனால், அவருக்கு மக்கள் தங்கள் பேராதரவை தெரிவித்து வருகிறார்கள்.
Dayna Pidhoresky என்ற அந்த வீராங்கனை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக டோக்கியோவுக்கு விமானத்தில் செல்லும்போது, அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது அவருக்கு தெரியாது.
ஆகவே, அவர் ஜப்பான் சென்றதும் 14 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டி வந்தது. ஆகவே, சுத்தமாக அவரால் ஓட்டப்பந்தயத்திற்கு பயிற்சி எடுக்கவே முடியாமல் போனது.
A month ago today would’ve been a major disappointment but finishing today was everything. An angry soleus tendon, stress reaction in my tibia and many many days in isolation due to a close-contact on the flight over created a mountain of adversity. You all propelled me forward?
— Dayna Pidhoresky (@DaynaPidhoresky) August 7, 2021
பயிற்சியே இல்லாமல், கடும் மன அழுத்தத்தை சந்தித்த Dayna ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டபோது, அவரால் 73ஆவது இடத்தைத்தான் பெற முடிந்தது. அதாவது கடைசி ஆளாகத்தான் ஓட்டத்தை முடித்தார் அவர்.
ஆனாலும், இப்படிப்பட்ட சூழலிலும் தளராமல், போட்டியிலிருந்து பின்வாங்காமல் பந்தயத்தை ஓடி முடித்த Daynaவுக்கு மக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் காட்டும் ஆதரவு தன்னை புளகாங்கிதம் அடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ள Dayna, தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
Dayna, 2019 ரொரன்றோ Waterfront மாரத்தான் பந்தயத்தில், 2:29:03 என்ற குறுகிய நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து, அந்த பந்தயத்தை குறைவான நேரத்தில் முடித்த வேகமான பெண் என பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.