முன்னாள் சிஸ்கே வீரரை தட்டி தூக்கிய டெல்லி அணி: விறுவிறுப்படையும் ஐபிஎல் எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் IPLல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம்(மார்ச்) 26ம் திகதி நடைபெற உள்ள நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்ரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்(40) நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியில் ஏற்கனவே அவுஸ்ரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து வரும் நிலையில் மற்றொரு அவுஸ்ரேலிய வீரரான ஷேன் வாட்சனும் துணை பயிற்சியாளராக நியமிக்கபட்டுள்ளார்.
இந்த நிலையில் டெல்லி அணி வெளியிட்ட அறிக்கை வாயிலாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், உலகின் மிகசிறந்த கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேனாக பங்குபெற்றது பெருமையாக உள்ளது. அதிலும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது முதல் அடுத்தடுத்த RCB மற்றும் CSk அணியில் பங்குபெற்ற விளையாடியது என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது, அவுஸ்ரேலியாவின் தலைசிறந்த கேப்டன் மற்றும் தற்போதைய கிரிக்கெட் உலகின் முதன்மை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கின் கீழ் துணை பயிற்சியாளராக பணியாற்ற இருப்பது எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு முடிவு எப்போது? பெரிய அப்டேட்டை கொடுத்த CSK அணி நிர்வாகம்