மாயாஜாலம் காட்டிய அஸ்வின்! போராடிய சாம்சன்..ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜேக் ஃபிரேசர், அபிஷேக் போரல் அதிரடி
நடப்பு ஐபிஎல்லின் 56வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் ஜேக் ஃபிரேசர், அபிஷேக் போரல் அதிரடியில் மிரட்டினர். இந்த கூட்டணி 4.2 ஓவரில் 60 ஓட்டங்கள் குவித்தது.
Welcome back to Kotla, Avesh ? pic.twitter.com/L46pXkpde4
— Delhi Capitals (@DelhiCapitals) May 7, 2024
ஜேக் ஃபிரேசர் 20 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார். இந்தக் கூட்டணியை தமிழக வீரர் அஸ்வின் உடைத்தார். அவரது ஓவரில் டோனோவன் ஃபெர்ரெய்ராவிடம் கேட்ச் கொடுத்து ஃபிரேசர் ஆட்டமிழந்தார்.
Powerplay wala Porel ?? pic.twitter.com/T7lsFwSeZE
— Delhi Capitals (@DelhiCapitals) May 7, 2024
அடுத்து ஷாய் ஹோப் ரன்அவுட் ஆக, அக்சர் படேலை 15 ஓட்டங்களில் அஸ்வின் வெளியேற்றினர். மறுமுனையில் ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் போரல் அரைசதம் விளாசினார்.
அணியின் ஸ்கோர் 144 ஆக உயர்ந்தபோது, போரல் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார். அவர் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்தார்.
அதன் பின்னர் பண்ட் (15), குல்பதின் (19) ஆட்டமிழக்க ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு, 20 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசினார்.
222 for those 2 points. ? pic.twitter.com/BdD4c34cX2
— Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2024
இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது. அஸ்வின் 3 விக்கெட்டுகளும், போல்ட், சந்தீப் சர்மா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை
அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால் (4), பட்லர் (19) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். எனினும், சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை காட்டினார்.
He’s on the charge and he doesn’t want to stop. Let’s go, Captain ? pic.twitter.com/KZlCMjVhgE
— Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2024
பராக் 27 ஓட்டங்களில் அவுட் ஆக, சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். அவர் 46 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முகேஷ் குமார் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது. கலீல் அஹ்மது, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Qila Kotla Hat-trick completed with a ????? win ? pic.twitter.com/iMb8AoCH9u
— Delhi Capitals (@DelhiCapitals) May 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |