சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மரண அடி கொடுத்த ரிஷாப் பண்ட்டின் படை! IPL 2024யில் முதல் வெற்றி
விசாகப்பட்டினத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தால் CSK-வை வீழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற ரிஷாப் பண்ட் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய வார்னர், பிரித்வி ஷா அதிரடியில் மிரட்டினர். இவர்களின் கூட்டணி 57 பந்துகளில் 93 ஓட்டங்கள் குவித்தது.
Aaj full Pushpa Mode?pic.twitter.com/Uz8ZE7jbuS
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
அரைசதம் கடந்த வார்னர் 52 (35) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜாவின் பந்துவீச்சில் பிரித்வி ஷா 43 (27) ஓட்டங்களில் அவுட் ஆக, அணித்தலைவர் ரிஷாப் பண்ட் ருத்ர தாண்டவம் ஆடினார்.
ஆனால் மறுமுனையில் மார்ஷ் 18 (12) ஓட்டங்களிலும், ஸ்டப்ஸ் ரன் எடுக்காமலும் பத்திரனா பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினர். சிக்ஸர்களை பறக்கவிட்ட பண்ட் 32 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
MSD is all of us here ? pic.twitter.com/hlhw4Jlhkw
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. பத்திரனா 3 விக்கெட்டுகளும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, டெல்லி கேபிட்டல்ஸின் கலீல் அகமது அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் (1), ரச்சின் ரவீந்திரா (2) அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டேர்ல் மிட்செல் 34 (26) ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அணியின் ஸ்கோர் 102 ஆக உயர்ந்தபோது, 30 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து முகேஷ் குமாரின் மிரட்டலான பந்துவீச்சில் தூபே (18), ரிஸ்வி (0) ஆட்டமிழக்க, ஜடேஜா மற்றும் தோனி வெற்றிக்காக போராடினர்.
கடைசி கட்டத்தில் தோனி சிக்ஸர்களை பறக்கவிட்டாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ஓட்டங்களே எடுத்ததால் டெல்லி கேப்பிட்டல் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனி 16 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்களும், ஜடேஜா 17 பந்துகளில் 21 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர். முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Mukesh Kumar gets 2 in 2 - a game changer for DC. pic.twitter.com/fATjQDMq70
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |