தவான் படையின் பந்துவீச்சை வேட்டையாடிய டி காக், பூரன் மற்றும் க்ருணால் பாண்டியா! 200 ரன் இலக்கு
ஐபிஎல் 2024 தொடரில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி காக் அரைசதம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். லக்னோவில் நிக்கோலஸ் பூரனின் லக்னோ அணியும், ஷிகர் தவானின் பஞ்சாப் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் முதலில் துடுப்பாடியது. கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களிலும், படிக்கல் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 19 ஓட்டங்களில் சாஹர் பந்துவீச்சில் போல்டு ஆனார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய டி காக் அரைசதம் விளாசினார்.
Partnership Broken ?
— IndianPremierLeague (@IPL) March 30, 2024
Arshdeep Singh with the important wicket of Quinton De Kock who departs for a well made 54(38)#LSG 146/4 after 15 overs
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #LSGvPBKS | @PunjabKingsIPL pic.twitter.com/tMZXOFKRo7
அணியின் ஸ்கோர் 125 ஓட்டங்களாக உயர்ந்தபோது டி காக் 54 (38) ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் சிக்ஸர்களை பறக்கவிட்ட அணித்தலைவர் பூரன் 21 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
க்ருணால் பாண்டியா சரவெடி
அதனைத் தொடர்ந்து பதோனி (8), பிஸ்னோய் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, க்ருணால் பாண்டியா சரவெடியாக 22 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் குவித்தார்.
?????????? ???????
— IndianPremierLeague (@IPL) March 30, 2024
Krunal Pandya with the finishing touches ??
His cameo is helping #LSG reach a good total ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #LSGvPBKS | @LucknowIPL pic.twitter.com/UkIo5FOIDd
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 199 ஓட்டங்கள் குவித்துள்ளது. சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
#LSG batters demonstrating opening, supporting and finishing acts ?
— IndianPremierLeague (@IPL) March 30, 2024
They set #PBKS a target of 2️⃣0️⃣0️⃣
Will it be chased or defended? ?
Follow the Match ▶️ https://t.co/HvctlP1bZb #TATAIPL | #LSGvPBKS pic.twitter.com/u73MTPVCeC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |