அனல் பறந்த ஆட்டம்! ருத்ர தாண்டவமாடிய டி காக்..சன்ரைஸர்ஸ் மிரட்டலான வெற்றி
குயிண்டன் டி காக் 47 பந்துகளில் 77 ஓட்டங்கள் விளாச, சன்ரைசர்ஸ் அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி காக் 77
செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த SA20 போட்டியில், சன்ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
Quinton de Kock and Matthew Breetzke waste no time in getting the scoreboard moving 💥💥#BetwaySA20 #SECvPC #WelcomeToIncredible pic.twitter.com/20KED1vSeO
— Betway SA20 (@SA20_League) December 29, 2025
முதலில் களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் குயின்டன் டி காக் மற்றும் பிரீட்ஸ்கி இருவரும் அதிரயில் மிரட்டினர்.
இதன்மூலம் சன்ரைஸர்ஸ் அணி 188 ஓட்டங்கள் குவித்தது. டி காக் 77 (47) ஓட்டங்களும், பிரீட்ஸ்கி 52 (33) ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியில் வில் ஸ்மீத் 35 (27) ஓட்டங்களும், ஷாய் ஹோப் 36 (19) ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
ஆனால், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் பிரிட்டோரியா அணி 18 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |