சொதப்பிய அசலங்கா..முஜீப்பின் சுழல், டி காக்கின் அதிரடியில் பார்படோஸ் அபார வெற்றி
Barbados tridents beat saint lucia kings by 8 wickets: பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது.
CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது.
கமில் பூரன் 37 ஓட்டங்கள்
செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது.
🚨 WHAT A SIX BY KAMIL POORAN! 🤯
— Pazi. (@CallMePazi1_) September 7, 2026
A stunning 91-metre straight six against the spinner!
Pooran sent the ball flying onto the roof! pic.twitter.com/QNPDb36N3e
முதலில் துடுப்பாடிய செயின்ட் லூசியா அணியில் கமில் பூரன் 37 (24) ஓட்டங்களும், ரோஸ்டோன் சேஸ் 34 (28) ஓட்டங்களும் விளாசினர். ஆனால் பின்னர் வந்த சரித் அசலங்கா 18 பந்துகளில் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.
முஜீப் உர் ரஹ்மானின் மிரட்டலான சுழற்பந்து வீச்சில் தடுமாறிய செயின்ட் லூசியா கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ஓட்டங்களே எடுத்தது.
குயிண்டன் டி காக் அதிரடி
பின்னர் துடுப்பாடிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியில் பிரண்டன் கிங் (22), ஸகாரி கார்டர் (32) நல்ல தொடக்கம் அமைத்தனர்.

அடுத்து கைகோர்த்த ரிவால்டோ கிளார்க், குயிண்டன் டி காக் 17.5 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெற வைத்தனர்.
குயிண்டன் டி காக் (Quinton de Kock) 31 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களும், கிளார்க் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களும் விளாசினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |