'நான் இனவெறியன் அல்ல’.. என்னை மன்னித்துவிடுங்கள்! குவின்டன் டி காக் அறிக்கை
கறுப்பினத்தவருக்கு ஆதரவாக முழங்காலிட மறுத்த தனது செயலுக்காக தென் ஆப்பரிக்கா நடச்சத்திர வீரர் குவின்டன் டி காக் மன்னிப்பு கோரியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் வீரர்கள் கறுப்பினத்தவருக்கு ஆதவராக, முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபர் 26ம் திகதி தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான போட்டி துவங்குவதற்கு முன்பும், வீரர்கள் முழங்கால் இட்டு கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, குவின்டன் டி காக், முழங்கால் இட மறுத்ததால் உலக அளவில் கண்டனங்கள் குவிந்தது. உடனே அவர் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து டி காக், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், தனது செயலுக்காக மன்னிப்பு கோரி குவின்டன் டி காக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Quinton de Kock statement ? pic.twitter.com/Vtje9yUCO6
— Cricket South Africa (@OfficialCSA) October 28, 2021
அந்த அறிக்கையில், நான் இனவெறியன் அல்ல, பிறந்ததில் இருந்தே பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனக்கு முக்கியம் என டி காக் குறிப்பிட்டுள்ளார்.