உலகக்கோப்பையில் முதல் சதம்! இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய டி காக்
இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் குவிண்டன் டி காக் அதிரடி சதம் விளாசினார்.
இலங்கை - தென் ஆப்பிரிக்கா மோதல்
டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்று இலங்கை பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் பவுமா (8) அவுட் ஆக, டி காக் மற்றும் வான் டெர் டுசன் இருவரும் இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
You know you love to see it ?#CWC23 #SAvSL #BePartOfIt pic.twitter.com/2l47WXTI3O
— Proteas Men (@ProteasMenCSA) October 7, 2023
டி காக் வாணவேடிக்கை
குறிப்பாக வாணவேடிக்கை காட்டிய டி காக் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் அவுட் ஆனார்.
டி காக் 84 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
A solid knock from the opener comes to an end ??#SAvSL #CWC23 #Crickettwitter pic.twitter.com/lEHbhk8iYn
— Sportskeeda (@Sportskeeda) October 7, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |