கடைசி உலகக்கோப்பையில் சிக்ஸர் அடித்து சதம்! அவுஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட டி காக்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் குவிண்டன் டி காக் சதம் விளாசினார்.
டி காக் ருத்ர தாண்டவம்
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ததைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா முதலில் களமிறங்கி ஆடி வருகிறது.
கடந்த போட்டியில் சதம் விளாசிய குவிண்டன் டி காக் இந்தப் போட்டியிலும் அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட டி காக் 90 பந்தில் சதம் விளாசினார்.
அவர் 94 ஓட்டங்களில் இருந்தபோது கம்மின்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சதமடித்தார். இதன்மூலம் அவர் சில சாதனை பட்டியலில்களிலும் இணைந்துள்ளார்.
Back to back centuries for Quinton de Kock in #CWC23 ?@mastercardindia Milestones ?#CWC23 #AUSvSA pic.twitter.com/Dc6eBS65w4
— ICC (@ICC) October 12, 2023
சாதனைகள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் (3) அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
உலகக்கோப்பையில் சதங்கள் அடித்த 2வது தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக் ஆவார். அவருக்கு முன்பாக டி வில்லியர்ஸ் இதனை செய்திருந்தார்.
இந்தத் தொடருக்கு முன்பாக இதுதான் எனது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்று கூறியிருந்தார் 30 வயதாகும் டி காக்.
Twitter (@ProteasMenCSA)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |