WCL 2025; டிவில்லியர்ஸ் அதிரடி சதம் - கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்கா
WCL இறுதிப்போட்டி
2 வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
இதில், பாகிஸ்தானுடனான போட்டியை விளையாட இந்தியா மறுத்ததால், பாகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாட்டம் ஆடியது.
20 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷர்ஜீல் கான் 76 ஓட்டங்கள் எடுத்தார்.
கோப்பை வென்ற தென் ஆப்பிரிக்கா
தொடர்ந்து, 196 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 197 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ஓட்டங்கள் எடுத்து அதிரடி சதமடித்தார். மறுமுனையில் டுமுனியும் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். மேலும், 429 ஓட்டங்கள் எடுத்து தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி WCL கோப்பையை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |