கோலியை திட்டிய வாய்களுக்கு டிவில்லியர்ஸ் கொடுத்த பதிலடி! என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியை, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் எடுக்கப்படவில்லை.
இதனால் கோலியை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்தனர். நேற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் கூட, அஸ்வின் இருந்திருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று கூறினர்.
ஆனால், கோலி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தான் எடுப்பது தான் அணி என்பது போல், தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து, இஷாந்திற்கு பதிலாக உமேஷ் யாதவ்வையும், ஷமிக்கு பதிலாக ஷர்தூல் தாகூரையும் எடுத்தார்.
இவர்கள் இருவருமே நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
இது குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணி தேவையற்ற விமர்ச்சனங்களை கண்டு கொள்ள தேவை இல்லை.
As “spectators” of Test Cricket, just stop worrying about team selection and other nonsense and start appreciating the competition, passion, skill and patriotism unfolding in front of your eyes. You’re missing a good game!
— AB de Villiers (@ABdeVilliers17) September 6, 2021
இந்திய அணி மிக சிறப்பாக விளையாடியது. கோலியும் மிக சிறப்பாக கேப்டன்சி செய்தார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த போட்டி இது ஜோ ரூட்டும் மிக சிறப்பாகவே செயல்பட்டார். இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி போட்டிக்காக ஆவலுடன் காத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.