அப்பா அவுட்டான கோபத்தில் டிவில்லியர்ஸ் மகன் செய்த செயல்! வெளியான வீடியோ
மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் டிவில்லியர்ஸை அவுட்டாக்கியதால், அவரது மகன் கடும் கோபத்தை வெளிபடுத்திய வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில், பெங்களூரு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் 6 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மொத்தம் 11 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகினார்.
So quite abd son pic.twitter.com/AjKOljJzEU
— hitupatel (@PatelHitz) September 26, 2021
இவர் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இறங்கியதல், இவருடைய அதிரடியை ரசிகர்கள் எதிர் நோக்கி காத்திருந்தனர்.
அதன்படி 18.4-வது பந்தை மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அசுர வேகத்தில் ஒரு பவுன்சர் போட, அதை டிவில்லியர்ஸ் ஆப் திசையில் அடித்து ஆட முற்பட, ஆனால் பந்தானது பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பர் டி காக்கிடம் சென்றது.
AB de villiers son reaction??
— Ariful Hasan (@ArifulH98125868) September 27, 2021
So heart touching pic.twitter.com/xRSn8yEP89
இதனால் டிவில்லியர்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். இதைக் கண்ட மைதானத்தில் இருந்த அவருடைய மகன், கோபத்தில் அங்கிருந்த இருக்கையின் மீது கையை பயங்கரமான குத்தினார்.
அப்போது உடனே அவருடைய தாய் அவரை தடுத்து நிறுத்தினார். இந்த வீடியோவை பெங்களூரு ரசிகர்கள் இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர்.