அடக்கம் செய்யப்பட்ட நபர் 3 மாதம் கழித்து உயிருடன் வந்ததால் அலறியடித்து ஓடிய மக்கள்! தலைசுற்றவைக்கும் சம்பவம்
இந்தியாவில் இறந்தவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட தொழிலாளி, 3 மாதங்களுக்குள் பின் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவத்தின் தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராஜப்பா (59). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான நாராஜப்பா, பெங்களூருவில் உள்ள இளையமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கும், மது அருந்திவிட்டு, வீட்டிற்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார். இதையடுத்து தந்தையை காணவில்லை என அவரது மகள் போலீசில் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே, நாராஜப்பா இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சொந்த ஊரில் மகள்கள் இருவரும் அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர்.
பின்னர், நாராஜப்பாவுக்கு இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், திடீரென நாராஜப்பா, சொந்த ஊரான சிக்கமாலூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இறந்துவிட்டதாக கூறி 3 மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டவர் திடீரென உயிருடன் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து தலைதெறிக்க ஓடினர்.
தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தது நாராஜப்பா இல்லை என்பதும், அவரது உருவ ஒற்றுமை கொண்ட வேறு நபர் என்பதும் தெரியவந்தது.
நாராஜப்பா கூலி வேலை செய்துகொண்டு 3 மாதங்களாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021