இறந்த நோயாளி மருத்துவமனை வார்டில் பல மணி நேரம் அனாதையாக கிடந்த அவலம்
பிரித்தானியாவில் இறந்த நோயாளி ஒருவர் மருத்துவமனை வார்டில் நீண்ட 5 மணி நேரம் கண்டுகொள்ள யாரும் இன்றி அனாதையாக கிடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் பல மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இறந்த நோயாளி ஒருவர் நீண்ட 5 மணி நேரம் அனாதையாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பர்மிங்காம் NHS அறக்கட்டளை சார்பு பல்கலைக்கழக மருத்துவமனைகள் ஒன்றில், நோயாளி ஒருவர் கீழே விழுந்து இறந்துள்ள சம்பவமும் அறிக்கை ஒன்றில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மட்டுமின்றி சில மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் 17 நோயாளிகளை வரை செவிலியர்களால் கவனிக்க வேண்டிய கட்டாயம் இந்த கொரோனா பரவல் காலத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கொரோனா வார்டுகளில், கொரோனா பாதிக்கப்பட்டாத நோயாளிகளை அனுமதிக்கும் அவல நிலையும் சில மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ளது.
சுட்டன் கோல்ட்ஃபீல்டில் உள்ள குட் ஹோப் மருத்துவமனையில் நோயாளிகளை உரிய நேரத்தில் வார்டுக்கு மாற்றுவதும் இல்லை என இது தொடர்பில் கண்காணித்துவரும் நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வார்ட் இலக்கம் 8-ல் நோயாளி ஒருவர் 6.45 மணிக்கு இறந்த நிலையில், அவர் தொடர்பிலான இறுதி நடவடிக்கை ஏதும் பகல் 11.35 வரை முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் செவிலியர்களால் நோயாளிகளுக்கு உரிய கவனிப்பை அளிக்க முடியவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுவது, ஊழியர்கள் பற்றாக்குறையால், பெரும்பாலானோர் அவர்களின் வேலை நேரத்தையும் கடந்து 12 மணி நேரம் வரை பணியில் இருப்பதே என தெரிய வந்துள்ளது.
நோயாளிகள், சில மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டதை விட மோசமான நிலையில் வெளியே அனுப்பப்பட்டதாகவும் சில உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.