ஜேர்மனி காப்பாற்ற போராடிய திமிங்கலம் உயிரிழந்துவிட்டதா?
ஜேர்மன் கடற்கரை ஒன்றில் சிக்கியிருந்த திமிங்கலம் ஒன்று ஜேர்மன் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட விடயம் நினைவிருக்கலாம்.
கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்
மார்ச் மாதம், ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை மக்கள் கவனித்துள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதன் உடலில் சுற்றியிருந்த வலையை அறுத்தெறிந்தனர்.
பின் மெல்ல அதன் தலைப்பகுதியை கடலை நோக்கித் திருப்பி, அது எப்படியாவது கடலை நோக்கி நீந்திச் சென்றுவிடுமா என அவர்கள் காத்திருக்க, அந்த திமிங்கலமோ மீண்டும் கரையைப் பார்த்து திரும்பியது.
ஜேர்மன் ஊடகங்கள் அதற்கு டிம்மி என பெயர் வைக்க, அதை எப்படியாவது கடலின் ஆழமான பகுதிக்குள் அனுப்பிவிட ஏராளமானோர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

இரண்டு பெரும் ஜேர்மன் கோடீஸ்வரர்கள் அந்த திமிங்கலத்தை கடலுக்குள் அனுப்பும் முயற்சிக்கான பணத்தை வழங்க, barge என்னும் ஒரு பெரிய தட்டையான படகில் நீர் நிரப்பி, அதன் மூலம் டிம்மி திமிங்கலத்தை கடலின் ஆழமான பகுதிக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
விடயம் என்னவென்றால், டென்மார்க் கடல் பகுதியில் திமிங்கலம் ஒன்று உயிரிழந்து கிடப்பது தற்போது தெரியவந்துள்ளது.
டிம்மியைப் போலவே அதுவும் humpback வகை திமிங்கலம்தான். அதுவும், 10 முதல் 15 மீற்றர் நீளமுடையதாக காணப்படுகிறது.
ஆக, அது டிம்மியா என்பதை அறிவதற்காக அதை கரைக்குக் கொண்டுவர டென்மார்க் சுற்றுச்சூழல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |