வெடித்துச் சிதறிய தொழிற்சாலை... பிரம்மாண்ட சாக்லேட் தொட்டிக்குள் மொத்தமாக விழுந்த பெண்
அமெரிக்காவில் சாக்லேட் தொழிற்சாலை ஒன்று வெடித்துச் சிதறியதில், பெண் ஒருவர் பிரம்மாண்ட சாக்லேட் தொட்டிக்குள் விழுந்து உயிர் தப்பியுள்ளார்.
சாக்லேட் தொழிற்சாலை
பென்சில்வேனியா மாகாணத்தில் சாக்லேட் தொழிற்சாலை ஒன்று பெரும் விபத்தில் சிக்கியத்தில், அதில் பணியாற்றிய 7 பேர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயங்களுடன் தப்பியிருந்தனர்.
@PA
இந்த நிலையில் 50 வயதான பாட்ரிசியா போர்ஜஸ் உடல் முழுவதும் தீ பற்றிக்கொள்ள, தப்பிக்கும் முயற்சியில் பிரம்மாண்ட சாக்லேட் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதில் அவர் கழுத்து எலும்பு உடைந்து போயிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
தமது வாழ்க்கை முடிவுக்கு வந்தது என கருதிய அவர் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்தின் போது தூக்கி வீசப்பட்ட பாட்ரிசியாவின் கழுத்து எலும்புகள் மற்றும் குதிகால் எலும்புகள் உடைந்துள்ளது,
அத்துடன் சாக்லேட் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தற்போது விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். பாட்ரிசியாவின் நெருங்கிய நண்பர்கள் பலர், இந்த விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
Image: fox43
7 பேர்கள் சம்பவயிடத்திலேயே
முதற்கட்ட விசாரணையில், சமையற் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 7 பேர்கள் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன், 10 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சம்பவத்திற்கு முன்னர் எரிவாயு கசிவை உணர்ந்ததாகவும், ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை முன்னெடுக்க தாமதித்ததாகவும் பாட்ரிசியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள பாட்ரிசியா குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.